உள்நாடுபிராந்தியம்

பாடசாலை பிரதி அதிபரைக் கடத்திய ஆசிரியரும் தம்பதியரும் கைது!

பியகமவில் உள்ள ஒரு பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கியதற்காக ஆசிரியர் உட்பட ஒரு தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி 4 ஆம் திகதி பியகமவின் சியம்பலாப்பே பகுதியில் வைத்தே பிரதி அதிபரை சந்தேக நபர்கள் வலுக்கட்டாயமாக ஜீப்பில் கடத்திச சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் பிரதி அதிபரை ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணையில் 37 மற்றும் 32 வயதுடைய தம்பதியினரும் ஆசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் பாதிக்கப்பட்டவர் பிரதி அதிபர் என்பதும் சந்தேக நபர்களில் ஒருவர் அவரது பாடசாலை ஆசிரியர் என்பதும் தெரியவந்தது.

இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வந்த தகராறில் இந்தக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பியகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்த சஹ்மி ஷஹீத்

editor

ஜனாதிபதி அநுர ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்

editor

எதிர்வரும் திங்கள் முதல் மின்வெட்டு அமுலாகாது