உள்நாடு

பாடசாலை காலணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் 2025.03.20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர், அவற்றின் செல்லுபடியாகும் காலம் 2025.02.28 அன்று முடிவடையும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Related posts

கலால்வரித் திணைகளத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம் [VIDEO]

இலங்கையில் நான்காவது மரணமும் பதிவு

பொருளாதார நெருக்கடியை சீராக்க நாம் கவனமாக செயற்பட வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor