விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | பாகிஸ்தான் ) – எதிர்வரும் டிசம்பர் மாதம் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே போட்டிகள் தொடங்க உள்ளது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றுள்ளது.

டிசம்பர் 18ஆம் திகதி முதல் டி20 தொடரும், டிசம்பர் 26 ஆம் திகதி முதல் டெஸ்ட் தொடர் ஆரம்பமாகிறது என்பதும் இந்த தொடரில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து உடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்டுகளில் விளையாட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியூசிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர்களில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

இருப்பினும் இந்த தொடர் கேன்சல் செய்ய வாய்ப்பு இல்லை என்றும் போட்டி தொடங்குவதற்கு இன்னும் இருபது நாட்களுக்கு மேல் இருப்பதால் அதற்குள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாகி விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

பும்ரா, அப்ரிடியை பின்னுக்கு தள்ளிய ரபாடா

நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி

தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்