விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV|பாகிஸ்தான் ) – பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர்கள் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பரிசோதனைகளின் முடிவுகளின் படி இம்ரான் கான், காஷிப் பாட்ஹி, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், பகர் ஜாமன் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகிய 7 கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக 3 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்று கேள்விக்குறியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிசிசிஐ தலைவர் கங்குலியின் உடல்நிலையில் முன்னேற்றம்

சமிந்த எரங்கவின் பந்து வீச்சு சட்டரீதியானது

15-வது ஐபிஎல் டி20 மெகா ஏலம்?