உள்நாடு

பாகிஸ்தான் கடற்படை பிரதம அதிகாரி – பிரதமர் இடையே சந்திப்பு

(UTV|கொழும்பு ) – பாகிஸ்தானின் கடற்படை பிரதம அதிகாரி அட்மிரல் ஸாபார் மஹ்முத் அப்பாஸி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் நேற்று(28) மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான படை ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இறுதிப்போரின்போது பாகிஸ்தான் இலங்கைக்கு உதவியமை குறித்து மஹிந்த ராஜபக்ஷவ நினைவுப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணி கடந்த டிசம்பரில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தமைக்கு பாகிஸ்தான் படையதிகாரி நன்றி தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் மீது லாகூரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் அதே அணி பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து தமது நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ததாக பாகிஸ்தான் அதிகாரி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மணல் விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

மே 9ஆம் திகதி உயிரிழந்த எம்.பி.க்கு இழப்பீடு

மின்கட்டணத்தினை அதிகரிக்க யோசனை