உலகம்

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தின அனுஷ்டிப்பு

(UTV | கொழும்பு) – இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019 ல் இந்தியா மேற்கொண்ட சட்டவிரோத மற்றும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளைக நினைவூட்டும் வகையில் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இரண்டாவது செயலாளர் (அரசியல்) திருமதி ஆயிஷா அபூ பக்கர் ஃபஹத் அவர்கள் மூலம் பாகிஸ்தான் ஜனாதிபதி டாக்டர் ஆரிஃப் அல்வியின் இந்நாள் குறித்த செய்தி வாசிக்கப்பட்டதோடு ஊடக இணைப்பாளர் திருமதி கல்சூம் கைசர் அவர்களால் பிரதமரின் செய்தி வாசிக்கப்பட்டது.

இங்கு கருத்துத்தெரிவித்த பதில் உயர்ஸ்தானிகர் திரு தன்வீர் அஹமத், பாகிஸ்தான் எப்போதும் காஷ்மீரிகளை கெளரவிப்பதாகவும் , சுயநிர்ணய உரிமைக்கான காஷ்மீரிகள் நியாயமான போராட்டத்தையும், உறுதியான நம்பிக்கையையும் தாம் பெருதும் போற்றுவதாகவும் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் தனது அரசியல் மற்றும் இராஜதந்திர உறவுகள் மூலம் இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்தியாவின் மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகத்திற்கு தொடர்ந்து விழிப்பூட்டிக்கொண்டிருக்கும். பாகிஸ்தான் எப்போதும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக நிற்பதோடு அவர்களையும் பாகிஸ்தானியர்களாகவே நோக்கும்.நமது காஷ்மீர் சகோதரர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையைப் பெற உதவுவதற்கு பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும் என்பது நமது தேசிய தீர்மானமாகும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அரசியல் ஆர்வலர் திரு. முஹம்மது ஷிராஸ் யூனுஸ் மற்றும் மூத்த அரசியல் ஆலோசகர் டாக்டர் அசேலா விக்கிரமசிங்க ஆகியோர் கருத்துத்தெரிவிக்கையில், சம்பந்தப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீர் சர்ச்சைக்கான தீர்வின் அவசியத்தை வலியுறுத்தினர். புத்திஜீவிகள், கொழும்பு வாழ் பாகிஸ்தான் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள் மற்றும் இலங்கை வாழ் காஷ்மீர் ஆதரவாளர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

கொழும்பு
05 ஆகஸ்ட், 2021

Related posts

ரணிலுக்கு பிரித்தானிய பிரதமர் பாராட்டு

இந்தியாவில் மேலும் 19 பேருக்கு புதிய கொரோனா உறுதி

பிரான்ஸின் மூத்த இராணுவ அதிகாரி கைது