விளையாட்டு

பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட வீரருக்கு பந்துவீச தடை

(UTV|COLOMBO) – விதிமுறைக்கு மாறாக பந்துவீசிய முறைப்பாடு தொடர்பில் பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட வீரரான மொஹமட் ஹபீஸுக்கு இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது

இங்கிலாந்தின் மிடில்செக்ஸ் கழகத்துக்காக தற்போது விளையாடி வருகின்ற மொஹமட் ஹபீஸ், சமர்செட் அணிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 30ஆம் திகதி டான்டன்னில் நடைபெற்ற போட்டியில் முறையற்ற விதத்தில் பந்துவீசியுள்ளார்.

இந்தப் முறைபாட்டை அடுத்து லோபோரா பல்கலைகழகத்தின் பரிசோதனைக்கு உள்ளான ஹபீஸ், விதிமுறைக்கு மாறாக பந்து வீசியது நிரூபணமாகி, தற்போது இங்கிலாந்தின் உள்ளூர் கழகமட்டப் போட்டிகளில் பந்துவீச அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான 39 வயதுடைய மொஹமட் ஹபீஸ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனினும், அவர் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

Related posts

இலங்கை – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை(06)

அஸ்வினுக்கு விடுத்த ரிக்கி பாண்டிங்

மீண்டும் வருகிறார் மலிங்க?