வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் 8 மாணவர்கள் இலங்கை வருகை

(UDHAYAM, COLOMBO) – பாகிஸ்தானை சேர்ந்த 8 மாணவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இரு நாடுகளையும் சேர்ந்த மாணவர்களுக்கிடையிலான நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் பாகிஸ்தானின் லாகூர் நகரிலிருந்து ஷாசியா ஷாகித் என்பவரின் தலைமையில் இவர்கள் இலங்கை வந்துள்ளனர்.

இன்று முதல் 28ம் திகதி வரை இவர்கள் இலங்கையில் தங்கியிருப்பர். இந்த மாணவர்கள் இலங்கையிலுள்ள பதில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் டொக்டர் ஷவ்றாஸ் அஹமத்கான் சிப்றாவையும் சந்தித்தனர்.

இந்த நிகழ்வு இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் நிலையத்தில் இடம்பெற்றது.

இவர்கள் கண்டி மற்றும் காலி பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

Related posts

ஒரே இரவில் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதி ஆன மாணவன்

வடகொரிய தலைவர் சீனாவுக்கு பயணம்

ஹட்டன் டிக்கோயா குப்பையை கொண்டு பசளை ( கொம்பஸ்) தயாரிக்க இடம் தெரிவு செய்யும் விசேட கலந்துரையாடல்