உள்நாடு

பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை!

(UTV | கொழும்பு) –

புத்தாண்டு கொண்டாட்டங்களை பாகிஸ்தான் அரசு முற்றிலும் தடைசெய்வதாக, பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கக்கர், ‘போரில் நமது சகோதர சகோதரிகள் தொடர்ந்து உயிரிழக்கும் இந்நேரத்தில், அவர்களுக்கு நம் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது’ எனத் தெரிவித்தார்.

மேலும், இஸ்ரேல் வன்முறையில் எல்லை மீறி செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதுவரை 9,000 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். பாகிஸ்தான் மட்டுமல்லாமல், மொத்த இஸ்லாமிய உலகமும், குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதையும், ஆயுதமேந்தாத பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வதையும் கண்டு சகிக்க முடியாத வேதனையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ராஜாங்கனையே சத்தாரதன தேரரை நீக்குவதற்கு தீர்மானம்

editor

இரண்டு முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி

கண்டி – கலஹா– தெல்தோட்டை பல்லேகம பகுதியில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை