வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தானில் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி பிரதமர் மோடிக்கு அழைப்பு

(UTV|PAKISTAN)-சார்க் மாநாட்டை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு உறுப்பு நாடு பொறுப்பேற்று நடத்தும். அதன்படி இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறினார்.

கடைசியாக 2014-ம் ஆண்டு காத்மாண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் மோடி பங்கேற்றார். 2016-ம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாநாடு நடைபெற இருந்தது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியா மாநாட்டில் பங்கேற்க முடியாத நிலையை விளக்கியது. வங்காளதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் பங்கேற்க மறுத்துவிட்டதால் சார்க் மாநாடு நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

Related posts

Favreau reveals one real “Lion King” shot

සිකුරාදා දින දුම්රිය වර්ජන තීරණය වෙනස් වෙයි.

Iranian boats ‘tried to intercept British tanker’