உலகம்

பாகிஸ்தானின் சிந்து நதி பகுதியில் 80 ஆயிரம் கோடி ரூபா மதிப்பிலான தங்க படிமம்

பாகிஸ்தானின் சிந்து நதி பகுதியில் 80 ஆயிரம் கோடி ரூபா மதிப்பிலான தங்க படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தின் அட்டோக் மாவட்டத்தில் பாயும் சிந்து நதி பகுதியில் இந்த தங்க படிமம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தேசிய பொறியியல் சேவைகள் பாகிஸ்தான் (நெஸ்பாக்), சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை ஆகியவை இணைந்து இந்த தங்கத்தை வெட்டி எடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிந்து நதி பகுதியில் 9 தங்க தொகுதிகளுக்கான சுரங்க உரிமைகளை ஏலம் விடுவதற்கான ஆவணங்களை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இது பாகிஸ்தானின் சுரங்க துறைக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தின் தொடக்கமாக இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தங்க படிமம் பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு ஒரு உயிர் நாடியாக அமையும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

துபாயில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, விமானச் சேவைகள் பாதிப்பு

ரீகல் சினிமா தியேட்டர்கள் முற்றாக மூடப்பட்டது

பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிய தடை – சுவிட்சர்லாந்தில் புதிய சட்டம்

editor