வகைப்படுத்தப்படாத

பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 மாணவர்கள் உள்பட 10 பேர் பலி

(UTV|INDIA)-குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் அம்ரோலி என்ற இடத்தை சேர்ந்த மாணவர்கள் அங்குள்ள டியூசன் சென்டரில் படித்து வருகிறார்கள். அங்கு படித்து வரும் மாணவர்கள் உள்பட 80 பேர் ஒரு பஸ்சில் டாங் மாவட்டத்தில் உள்ள சபரி அணைக்கட்டுக்கு சுற்றுலா சென்றனர்.

சுற்றுலாவை முடித்து விட்டு அவர்கள் பஸ்சில் சூரத்துக்கு திரும்பினர். அவர்களது பஸ் மகால்-பரிதாபாத் சாலையில் அகவா நகரில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 8 மாணவர்கள் உள்பட 10 பேர் பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 24 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related posts

Unemployed graduates tear-gassed

இந்திய பிரதமரும் பாகிஸ்தான் பிரதமரும் சந்திப்பு..

கட்டாருக்கு மேலும் கால அவகாசம்