உள்நாடுபிராந்தியம்

பழைய தகராறு தொடர்பில் வாக்குவாதம் கொலையில் முடிந்தது

பொல்பொக்க – ஹல்லின்ன வீதியில் பழைய தகராறு தொடர்பில் இருவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (26) காலை இடம்பெற்றதாகவும், காயமடைந்த நபர் கஹவத்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ஹல்லின்ன வத்த, ஓப்பநாயக்க பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார்.

சம்பவ தினத்தன்று உயிரிழந்தவரும் சந்தேகநபரும் ஒரு தொண்டு நிகழ்வில் பங்கேற்றபோது, இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், மண்வெட்டியால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஓப்பநாயக்க பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஓப்பநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யாழ். பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

நான்கு முகங்களுக்கு 1 மில்லியன் ரூபாய் பரிசு

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் எந்த மாற்றமும் இல்லை

editor