பழங்குடியினர் எமது நாட்டின் ஒரு அங்கம் எனவும், பழங்குடியினருக்கும் ஏனைய அனைவருக்கும் இருக்கும் உரிமைகள் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை (22) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்ததார்.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு பழங்குடி இன மக்களின் வரலாற்றுப் பெறுமதியை விளக்கிய பழங்குடியின தலைவர் உருவரிகே வன்னியாளத்தோ, தாம் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
மேலும் பழங்குடி இன மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து அதிகாரிகளின் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இது குறித்து பிரதமர் தெரிவிக்கையில்,
பழங்குடியினர் எமது நாட்டின் ஒரு அங்கம் எனவும், பழங்குடியினருக்கும் ஏனைய அனைவருக்கும் இருக்கும் உரிமைகள் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு தெரிவித்தார்.
பழங்குடியின மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை குறைக்க நிலவும் சட்ட மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்திய பிரதமர், அடுத்த மூன்று மாதங்களில் பழங்குடியினரின் உரிமைகளை வென்றெடுக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் கூறினார்.
இந்நிகழ்வில், சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபாண்டி, கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் சுகத் பலகல்ல, வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரியபண்டார மற்றும் சுற்றாடல் அமைச்சு மற்றும் மாற்றுக் கொள்கை மையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் பழங்குடியின மக்கள் குழுவினர் கலந்துகொண்டனர்.
-பிரதமர் ஊடகப் பிரிவு