வகைப்படுத்தப்படாத

பள்ளி பேருந்து மீது ரெயில் மோதிய விபத்தில் 4 பேர் பலி

(UTV|COLOMBO)-பிரான்ஸ் நாட்டில் பள்ளி பேருந்து மீது ரெயில் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.

தெற்கு பிரான்சின் மிலாஸ் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை பள்ளி மாணவர்கள் தினமும் பஸ்சில் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து வந்து கொண்டிருந்தது. பயர்னீஸ் பகுதியில் வரும்போது அங்கிருந்த ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்றது.

அப்போது அந்த வழியாக வந்த ரெயில் பள்ளி பேருந்து மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என தெரிவித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

UAE leaders perform funeral prayers for Sharjah Ruler’s son

Brazil’s President Bolsonaro offers US ambassador job to son

Emmy winning actor Rip Torn passes away at 88