உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடுகள் வௌியீடு

(UTVNEWS | COLOMBO) -பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த கையேடு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வழிகாட்டல் கையேடுகளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனை நிலையங்களின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

2019/2020 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் தினம் மார்ச் மாதம் 26ஆம் திகதியாகும்.

விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் சமர்ப்பிப்பது அவசியமாகும். மாணவர்கள் வழிகாட்டல் கையேட்டினை முழுமையாக வாசித்த பின்னர் விண்ணப்பங்களை பூரணப்படுத்தி சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க வலியுறுத்தியுள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

குருந்தூர் மலை தொல்பொருட் திணைக்களத்திற்கானது – சியம்பலாகஸ்வெவ ஜனாதிபதிக்கு மகஜர்.

இன்று முதல் பயணிகள் விமானம் தரையிறங்குவதற்கு தடை

சவுதி அரேபியாவில் கட்டுமான வேலைகளுக்கு இலங்கையர்களுக்கு பல வாய்ப்புகள்