உள்நாடு

பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பம் தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – பல்கலைக்கழக அனுமதிக்காக இதுவரையில் விண்ணப்பிக்காத மாணவர்கள், தமது விண்ணப்பங்களை அனுப்பிவைப்பதற்கான மேலதிக காலத்தை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

குறித்த விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில் நாட்டில் அமுலாகியுள்ள பயணக்கட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலத்தை மேலும் சில நாட்களுக்கு நீடிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 21,22,23 ஆகிய திகதிகளில் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

Related posts

முச்சக்கர வண்டி சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு ரணிலிடமிருந்து நல்ல செய்தி

Green Apple களின் விலை குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இன்று காலை இரண்டு நிமிட மௌன அஞ்சலி