உலகம்

பலி எண்ணிக்கை 75 ஆக அதிகரிப்பு

(UTV|பாகிஸ்தான்) – பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. அந்நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.

பனிப்பொழிவு காரணமாக அம்மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குவெட்டா நகரில் உள்ள விமான நிலையமும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி கிடையாது

ஒஸ்கார் விருது பெற்ற நடிகர் மர்மமாக உயிரிழப்பு!

முக கவசம் அணியாததால் சிலி ஜனாதிபதிக்கு அபராதம்