அரசியல்உள்நாடு

பலஸ்தீனில் உயிரிழந்தவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸையும் காயமுற்றவர்களுக்கு பூரண சுகம் கிடைக்கவும் அங்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகவும் பிரார்த்திப்போம் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களது நோன்பு பெருநாள் வாழ்த்துச்செய்தி.

இறைவனின் கட்டளைக்கமைய இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான நோன்புகள் முழுவதும் நோன்று புனித ரமழான் மாதம் முழுவதும் வணக்க வழிபாடுகள் புரிந்து விட்டு இன்று மகிழ்ச்யோடு பெருநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைத்து உடன்பிறப்புகளுக்கும் தனது ஈதுல் பித்ர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்பு, மன்னிப்பு, பொறுமை, மனிதாபிமான செயல்கள் மூலமும் ஆத்ம பரிசோதனை மூலமும் எமது ஆத்மாவையும் உடலையும் தூய்மைப்படுத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை புனித நோன்பு எமக்கு வழங்கியது.

ரமழானிலே கடமையான தொழுகைகள், குர்ஆன் ஓதுதல், இஃதிகாப் இருத்தல் மற்றும் இதர ஸுன்னத்தான அமல்கள் மூலம் பள்ளிவாசல்கள் நிரம்பிக் காணப்பட்டன. இரவு பகலாக நல்லுபதேசங்கள் கேட்கக் கிடைத்த வண்ணம் இருந்தன. இவ்வாறெல்லாம் நல்ல பல விடயங்களைப் பெற்றுக் கொண்டு நல்லமல்களில் ஈடுபட்ட நாம் அதன் பக்குவத்திலும் பயிற்சியிலும் எமது வாழ்க்கையை தொடர்ந்து அமைத்துக் கொள்வதே ரமழானில் நாம் அடைந்த பயனாகும்.

அதேபோன்று, எமது நாட்டில் இன நல்லிணக்கம் சமத்துவம் நிலைபெறுவதற்கும் இன, மத வேறுபாடுகளுக்கப்பால் அனைவரும் ஒற்றுமையாகவும் சந்தோசமாக வாழ்வதற்கும் இறைவனிடம் பிராத்திப்போம்.

அதேபோன்று பலஸ்தீனில் நடைபெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களின் காரணமாக நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளதுடன் அதிகமானவர்கள் காயத்திற்குள்ளாகியிருப்பதையும் நாம் அறிவோம்.

அங்கு உயிரிழந்தவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸையும் காயமுற்றவர்களுக்கு பூரண சுகம் கிடைக்கவும் அங்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகவும் நமது அன்றாட பிராத்தனைகளில் சேர்த்துக்கொள்வோம்.

ஈத் முபாரக்.

கலாதிநி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்
பாராளுமன்ற உறுப்பினர்,
பிரதித்தலைவர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Related posts

மேலும் மூவர் குணமடைந்தனர்

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி அனுதாபம்

editor

ஊரடங்கு சட்டத்தை மீறிய 289 பேர் கைது