வகைப்படுத்தப்படாத

பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை!

(UDHAYAM, COLOMBO) – கலடுவாவ மற்றும் லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகிக்கும் பிரதான குழாய் பாதையில் துன்மோதர பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பிரதான குடிநீர் குழாய்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக வக , களுஅக்கல , ஹங்வெல்ல , ஜல்தர , ரனால போன்ற பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக கடுவெல பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தற்காலிகமாக மூடப்படும் ஒரு நிரல் வீதி

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை

இளம் வயது தந்தை தூக்கிட்டு தற்கொலை