வகைப்படுத்தப்படாத

பல கோடி ரூபா பெறுமதியான கொக்கேன் போதைப்பொருளுடன் மூவர் கைது

(UDHAYAM, COLOMBO) – சுமார் 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய கொக்கேன் போதைப்பொருளை இந்நாட்டிற்கு கொண்டு வந்த லிதுவேனியா நாட்டவரொருவரை காவற்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்துள்ளது.

இந்த போதைப்பொருளை பொறுப்பேற்க வந்த நைஜீரியா நாட்டவர்கள் இருவரும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரேசில் , லிதுவேனியா , இந்தியா , நைஜீரியா மற்றும் இலங்கையை தொடர்பு படுத்தி இந்த போதைப்பொருள் வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் மூவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் , நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

நிவாரணப்பொருட்களுடன் சீனக்கப்பல்

´பாக்சிங் டே’என அழைப்பது ஏன்?

Fmr. Defence Secretary Arrested