சூடான செய்திகள் 1

பறவைகளால் விமானம் தரையிறக்கம்

(UTV|COLOMBO) டுபாய் நோக்கி பயணத்தை ஆரம்பித்த ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் யூ.எல். 225 என்ற விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் நேற்று மாலை 06.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென அவசரமான தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய வான் எல்லையில் வைத்து விமானத்தில் பறவைகள் மோதியுள்ளதால் விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து அதிலிருந்த பயணிகள் யூ.எல். 225 என்ற அதே இலக்கத்தையுடைய மற்றொரு விமானத்தில் டுபாய் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

 

 

 

Related posts

ஜனாதிபதி தேர்தலுக்கான கண்காணிப்பு பணிகளில் 7500 பேர்

இரவு நேரங்களிலும் கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ள தீர்மானம்

மழை நிலைமையானது அதிகரித்து காணப்படும்…