உள்நாடு

பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு விண்ணப்பிக்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த கால அவகாசம் எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் மட்டுமே அந்தத் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்.

அனைத்து விண்ணப்பங்களையும் தாங்கள் படித்த பாடசாலையின் அதிபரால் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் எனவும் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையில் இந்த பரீட்சைக்கு தோற்ற முடியாது எனவும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரம் 2022 (2023) பரீட்சையின் காலத்தில் இந்தத் பரீட்சை நடத்தப்படாது என்றும், பரீட்சை நடைபெறும் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான எந்தவொரு விசாரணையையும் பின்வரும் தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்கலாம்.

நேரடி தொலைபேசி எண் – 1911
0112 786 616 / 0112 784 537 / 0112 784 208
தொலைநகல் – 0112 784 422
பொது தொலைபேசி இலக்கங்கள் – 0112 786 200 / 0112 784 201 / 0112 785 202

Related posts

சிறிய செயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு

சம்பிக்க ரணவக்க – நீதிமன்ற அழைப்பாணையில் மாற்றம்

மறு அறிவித்தல் வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது