வகைப்படுத்தப்படாத

பரிந்துரைகளை அமுல்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்-ஐக்கிய தேசிய கட்சி

(UTV|COLOMBO)-பிணை முறி மோசடி குறித்த விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல் படுத்துவதற்கு தாங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான அஜித் பீ பெரேரா, பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணை அறிக்கையின் உள்ளடக்கங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டார்.

அதில் பிரதமர் பக்கம் எந்த தவறும் இல்லை என்று நிரூபனமாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த அறிக்கையின் பரிந்துரைகளை அமுலாக்க முழு ஆதரவையும் ஐக்கிய தேசிய கட்சி வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

உலகின் முதன் முதலாக பூமிக்கு அடியில் ஆடம்பர ஹோட்டல்

பெரகல பிரதேசத்தில் மண் சரிவு

TID arrests NTJ member who tried to leave country