உள்நாடு

பயணிகள் படகு சேவை இன்று ஆரம்பம் [VIDEO]

(UTV|கொழும்பு) – வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்லை வரையான பயணிகள் படகு சேவை இன்று(11) ஆரம்பமாகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இந்தத் திட்டத்தை முன்னெடுக்கின்றது.

கொழும்பு நகரத்தில் நிலவும் வாகன நெரிசலுக்கு தீர்வாக இந்த பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படுகிறதுடன், இந்த படகு சேவையின் ஊடாக வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்லைக்கு 30 நிமிடத்தில் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை, ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் இந்த சேவை இடம்பெறும் எனவும் ஆரம்பத்தில் நான்கு படகுகள் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரணில் அநுரவுடன் டீல் செய்வதற்கு முன்னர் கடவுச்சீட்டு மற்றும் விசா வரிசையை இல்லாது செய்யவும் – சஜித்

editor

இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் வைரஸ்!

மேலும் 204 பேர் சிக்கினர்