உள்நாடு

பயணக்கட்டுப்பாட்டில் தளர்வில்லை

(UTV | கொழும்பு) – தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் கொவிட் தடுப்பு தேசிய செயலணி உறுப்பினர்களும் இடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 4 ஆம்திகதிகளில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படாமல், தொடர்ந்தும் ஜூன் 7 ஆம்திகதிவரை நீடிக்கும் என இராணுவ தளபதி தெரிவித்தார்.

Related posts

இந்து சமுத்திர மாநாட்டில் முன்னாள் பிரதமர்

டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர காலமானார்

சியல்கோட் சம்பவத்துக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் கண்டனம்