சூடான செய்திகள் 1

பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான வதந்திகள் தொடர்பில் நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) – பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வௌியாகியுள்ள வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், இவ்வாறான தகவல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

புலனாய்வு பிரிவு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஷாந்த கோட்டேகொட, ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், பரவியுள்ள வதந்தி தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வடமேல் மாகாணத்திற்கு மொரகஹகந்த மற்றும் மகாவலி நீரை கொண்டுசெல்லும் திட்டப்பணிகள் ஆரம்பம்

அமைச்சர் ரிஷாட்டின் முயற்சியினால் முசலியில் கடல்சார் பல்கலைக்கழகத்துக்கான நடவடிக்கை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீ.கே இந்திக காலமானார்