சூடான செய்திகள் 1

பயங்கரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் தியாகிகளாக பிரகடனம்

(UTV|COLOMBO) கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் தியாகிகளாக பிரகடனம் செய்யப்படவுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

நேற்று(26)  பொரளையில் உள்ள தேவாலயத்தில் நடத்திய சிறப்பு பிரார்த்தனையின் போதே கர்தினால் மல்கம் ரஞ்சித் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சமயம் என்பது வாழ்க்கை. தமது சமய நம்பிக்கையினாலேயே இவர்கள் கொல்லப்பட்டார்கள், தாக்குதல்களை மேற்கொண்டவர்களுக்கு, வாழ்க்கையின் பெறுமானம் தெரியவில்லை” என்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் மேலும் குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

CID இல் ஆஜரான நாமல் ராஜபக்ஷ எம்.பி

editor

அரச பாடசாலைகளுக்கு எதிர்வரும் 3ம் திகதி விடுமுறை

புதையல் தோண்டிய ஆறு பேர் கைது