உள்நாடு

பத்து கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

(UTV | கொழும்பு) –    நாட்டில் உடன் அமுலுக்கு வரும் வகையில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி பதுளையின் வெலிமடை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ஹூலங்கபொல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் மத்துகம காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட யட்டதொல கிராம சேவகர் பிரிவின் அபேதன்ன வத்தை பிரதான பகுதியும், க்ளே பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டன.

மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.

யாழ்ப்பாணம் – கரவெட்டி காவற்துறைப் பிரிவுக்கு உட்பட கரனவாய் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது.

இரத்தினபுரியின் பொத்தகந்த கிராம சேவகர் பிரிவின் நோரகல தோட்டம் மேல் பிரிவு, பனாவென்ன கிராம சேவகர் பிரிவின் பெல்மதுல தோட்டத்தின் 1ஆம் 5ஆம் பிரிவுகள் மற்றும் கபுஹெதொட்ட கிராம சேவகர் பிரிவின் பெல்மதுல தோட்டத்தின் 5ஆம் பிரிவு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.

அதேவேளை கொழும்பு கிரேன்ட்பாஸ் காவல்துறை பிரிவுக்குட்பட்ட 233 ஆம் தோட்டம் மற்றும் மஹவத்த வீதி ஆகிய பகுதிகள் இன்று முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன.

 

Related posts

21 மாவட்டங்களில் நாளை தளர்த்தபடவுள்ள ஊரடங்கு

கொழும்பின் சில பகுதிகளுக்கு 20 மணிநேர நீர்வெட்டு

வௌ்ளை சீனி இறக்குமதிக்கு மீள அனுமதி