உள்நாடு

பத்தாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

(UTV | கொழும்பு) – தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்றைய தினம் (01) பத்தாவது நாளாக உச்ச நீதிமன்றில் பரிசீலிக்கப்படவுள்ளது.

ஜூன் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலையும் ஜனாதிபதியினால் மார்ச் முதலாம் திகதி பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலையும் சவாலுக்கு உட்படுத்தி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலனை இன்று (01) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய நீதியரசர்கள் புவனெக அலுவிகார ,சிசிர ஆப்ரு ,பியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இடம்பெறவுள்ளது.

Related posts

உலக வாழ் கிறிஸ்தவ மக்களது புனித வெள்ளி இன்று

MV X-PRESS PEARL கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் 7 உறுப்பினர்கள் கைது

இன்றும் தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு