உலகம்

பதவிப் பிரமாண நிகழ்ச்சி மிகவும் எளிமையாக

(UTV | கொழும்பு) – தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் 150-க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. தமிழகத்தின் புதிய முதல்வராக அந்தக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்க உள்ளாா். இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைய உள்ளது.

மேலும், திமுகவின் கூட்டணியில் அங்கம் வகித்த, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளும் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியைப் பெற்றுள்ளன.

அதிமுக தலைமையிலான கூட்டணி 75ற்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. 65ற்கும் அதிகமான இடங்களை வென்று பிரதான எதிா்க்கட்சி அந்தஸ்தை அதிமுக பெறுகிறது.

இந்நிலையில், நாளை எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி முறையாக தலைவரை தேர்வு செய்வோம். அதன்பின் அதிகாரிகளுடன் கலந்து பேசி பதவியேற்பு திகதியை முடிவு செய்து அறிவிப்போம். கொரோனா காலத்தை மனதில் வைத்து பதவிப் பிரமாண நிகழ்ச்சியை எளிமையாக கவர்னர் மாளிகையில் நடத்த முடிவு செய்துள்ளோம். தேதியை இன்று அல்லது நாளை அறிவிப்பேன்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

புதினின் அறிவிப்பினால் அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடும் ரஷ்ய ஆண்கள்

பேஸ்புக் நிறுவனமான மெட்டாவுக்கு 1.2 பில்லியன் யூரோக்கள் அபராதம்

அல்-ஜெசீரா செய்தி நிறுவனத்தை மூடிய இஸ்ரேல்!