வகைப்படுத்தப்படாத

பணிப்புறக்கணிப்பால் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்

(UDHAYAM, COLOMBO) – மசகு எண்ணெய் சார் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பால் எரிபொருளை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கணிய எண்ணெய் கூட்டுதாபனத்தின் தலைவர் சேஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

திருகோணமலை துறைமுகத்தில் உள்ள எண்ணெய் தாங்கிகளை விற்பனை செய்வதாக வெளியாகியுள்ள தகவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மசகு எண்ணெய் சார் தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் இவ்வாறு பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இந்த பணிப்புறக்கணிப்பை அறிவித்ததையடுத்து நேற்று மாலை முதல் தற்போது வரை எரிபொருள் நெருப்பு நிலைங்களில் நீண்ட வரிசை காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சில பாதைகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிப்புறக்கணிப்பு காரணமாக கொலன்னாவ எண்ணெய் களஞ்சியசாலையில் இருந்து எரிபொருள் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டாலும், போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக கணிய எண்ணெய் கூட்டுதாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மனித கொலைகள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரொருவர், துப்பாக்கியுடன் கைது

நைஜீரியாவில் குழந்தைகள் தொழிற்சாலை முற்றுகை

வான் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 60 பேர் பலி