உள்நாடு

பட்டதாரிகளுக்கான பயிற்சித்திட்டம் இன்று ஆரம்பம்

(UTV | கொழும்பு) – அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கான திசைமுகப்படுதல் பயிற்சித் திட்டம் இன்று(14) ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதியின் சுபீட்சத்திற்கான நோக்கு எனும் கொள்கை பிரகடனத்திற்காமைவாக இந்த திட்டம் ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டுதல் நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புப் படை தலைமையகங்கள், படையணி தலைமையகங்கள் மற்றும் இராணுவ பயிற்சிப் பாடசாலைகள் என 51 இராணுவ நிலையங்களில் இன்று(14) கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படுகின்றது.

ஐந்து கட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டமானது ஒரு மாத கால வதிவிட பயிற்சி திட்டமாகும்.

ஒவ்வொரு கட்டத்திற்கும் 10,000 பட்டதாரிகள் வீதம் ஐந்து மாதங்களுக்குள் 50,000 பட்டதாரிகளுக்கும் பயிற்சியளிக்கப்படவுள்ளது.

Related posts

தற்போது அவசர அமைச்சரவைக் கூட்டம்

வடக்கு காசாவை தொடர்ந்து தெற்கு காசா பகுதிக்குள் நுழையும் இஸ்ரேல்..!

20 ஆவது திருத்தம் – பாராளுமன்ற விவாதம் இன்று