வகைப்படுத்தப்படாத

படகு கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

(UTV|CHINA) சீனா நாட்டின் கியுசூ மாகாணத்தில் உள்ள பான்ராவ் கிராமத்தில் டீய்பான் என்கிற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் நேற்று முன்தினம் 29 பயணிகளுடன் ஒரு படகு சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் ஆற்றில் மூழ்கினர்.  இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் மாயமாகினர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவினர் படகுகளில் விரைந்து சென்றனர். ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 11 பேரை பத்திரமாக மீட்டனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மேற்படி காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கனமழை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை

Unemployed graduates tear-gassed

ஜனாதிபதி – டெங்கு ஒழிப்பு செயலணி இன்று விசேட கலந்துரையாடல்