சூடான செய்திகள் 1

பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் முன்னிலையில் இன்று (16) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நிதியை பயன்படுத்தி கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கூரைத்தகடுகள் விநியோகித்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

மே மாதம் 21 ஆம் திகதி ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் ஆரம்பம்…

சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களை விநியோகிக்க நடவடிக்கை

கால்களை இழந்த 200 க்கும் மேற்பட்டோர் புத்தளம் மாவட்டத்தில்