சூடான செய்திகள் 1

பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) – திவிநெகும வழக்கு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(27) நிராகரித்துள்ளது.

குறித்த வழக்கினை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் என கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான ஷிரான் குணவர்தன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இரண்டு கோடியே 94 இலட்சம் ரூபாய் நிதியில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிழற்படம் அடங்கிய 50 இலட்சம் கலண்டர்களை அச்சிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வளர்ப்பு நாயை திருமணம் செய்து கொண்ட பெண்..!(video)

மலையகத்தில் வான்கதவுகள் திறப்பு

பந்தல் காட்சிகள் தடை செய்யப்படவில்லை