உள்நாடு

பசில் – கட்சியின் பின்வரிசை எம்.பிக்களுக்கு இடையே இன்று சந்திப்பு

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

அலரிமாளிகையில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் தற்போதைய கொவிட்-19 பரவல் நிலை தொடர்பிலும், ஏனைய பிரச்சினைகள் குறித்தும், இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முட்டைகளை இறக்குமதி செய்வதில சிக்கல் – அஜித் குணசேகர.

பாகிஸ்தான் காந்தாரா பெளத்த பாரம்பரியத்தின் பிறப்பிடம் : ஆரிஃப் ஆல்வி

இந்திய வெளிவிவகார அமைச்சர் – ரணில் இடையே சந்திப்பு