வகைப்படுத்தப்படாத

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா இந்தியா விஜயம்

(UTVNEWS|COLOMBO) – இந்தியா மற்றும் பங்களாதேஷிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா 4 நாட்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் மூன்று இருதரப்பு திட்டங்கள் காணொலி மூலம் தொடங்கப்படும் என்றும் வெளியுறவு துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும் உலக பொருளாதார மன்றம் சார்பாக நடைபெறும் இந்திய பொருளாதார உச்சிமாநாட்டில் சிறப்பு விருந்தினராக ஷேக் ஹசினா கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

Bankers sent home as Deutsche starts slashing jobs

சிலியில் 6.7 புள்ளிகளாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

காலநிலை