கேளிக்கை

பக்தி, பைத்தியம் என பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கமல்

(UDHAYAM, COLOMBO) – கடவுள் குறித்து கருத்து தெரிவித்து ஏற்கெனவே சர்ச்சையில் பல முறை சிக்கிய நடிகர் கமல் ஹாசன், மீண்டும் ஒரு தடவை சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நமீதாவிடம் கடவுள் குறித்து எழுப்பிய கேள்வியால் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அண்மைக் காலமாக ஆன்மீகத்தில் நமீதா மிகவும் நாட்டம் கொண்டுள்ளது குறித்து கேள்வியெழுப்பிய கமல், ‘கடவுளிடம் பேசுவீர்களா’ என, கேட்க அதற்கு நமீதா, ‘ஆமாம்’ என்றார்.

அதற்கு கமல், ‘கடவுளிடம் நாம் பேசினால் பக்தி. கடவுள் நம்மிடம் பேசினால் பைத்தியம்!’ என சொல்லி சிரித்தார்.

கமலின் இந்த கருத்து, அந்நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பரவலான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

பக்தி, பைத்தியம் என பேசி சர்ச்சையை கிளப்புவது கமலுக்கு தேவையா? என, விமர்சகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Related posts

வர்ம கலை கற்கும் காஜல் அகர்வால்

சோனாக்ஷி இனது ‘I Love You’

‘இந்நேரம் வேறு லெவலில் இருந்திருப்பேன்..’ – பூஜா