சூடான செய்திகள் 1

பகிடிவதை குறித்த முறைப்பாடுகளிற்காக அவசர தொலைபேசி இலக்கம்

(UTV|COLOMBO)-பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் முன்னெடுக்கப்படும் பகிடிவதைகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான முறைப்பாடுகளை சமர்பிப்பதற்கு விசேட அலுவலகம் ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பகிடிவதை தொடர்பில் 011 – 212 3700 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தொலைபேசி இலக்கத்தினூடாக 24 மணித்தியாலங்களும் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பேஸ்புக்கில் இடம்பெற்ற மோசடி குறித்த விசாரணைகள்

கஞ்சிபான இம்றானின் உதவியாளர் ஜீபும்பா கைது

நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்