சூடான செய்திகள் 1

நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேரி ஏன் ஹாகன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

(UTV|COLOMBO) நாட்டிற்கு வருகை தந்துள்ள நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர் மேரி ஏன் ஹாகன் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் தனது விஜயத்தின்போது நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர் கவனம் செலுத்தவுள்ளதாக, இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்காக சுமார் 7 மில்லியன்அமெரிக்க டொலர் நிதி வழங்குவதற்கு நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Related posts

இலங்கையில் சமூகவலைகள் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதி அறிவிப்பு

மதுபோதையில் வாகனத்தை செலுத்திய 1321 பேர் கைது

களனி பல்கலைக்கழக கத்திக்குத்து தாக்குதல் – மாணவன் விளக்கமறியலில்