வகைப்படுத்தப்படாத

நோர்வூட்டில் மோட்டார் சைக்கிலில் மோதுண்ட வயோதிபபெண் படுகாயமடைந்து கண்டி வைத்தியசாலையில்

(UDHAYAM, COLOMBO) – நோர்வூட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் மோதுண்ட படுகாயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

நோர்வூட் சிங்கள வித்தியாலயத்திற்கருகிலே 22.05.2017 மதியம் 12.15 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது

நோர்வுட் பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த மோட்டார் சைக்கில் பாதையில் நடந்து சென்ற 65 வயதுடைய பெண் ஒருவரே மோதுண்டு படுகாயமடைந்துள்ளார்

காயமடைந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்த பெண் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையிருந்து மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

இரு அரச தலைவர்கள் அடுத்தவாரம் இலங்கை விஜயம்

அமெரிக்கா – ரஷ்யா பேச்சுவார்த்தை வெற்றி

“Baby Driver 2” could happen fairly soon