உள்நாடு

நோய் அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காதீர்கள்

(UTV – கொழும்பு) – கொவிட்19 வைரஸ் தொடர்பான ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காது உடனடியாக சுகாதாரத் துறையினரை நாடுமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்று குறித்து மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை 151 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 22 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ள நிலையில், 4 பேர் மரணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புறக்கோட்டை- செட்டியார் தெருவில் கபொஸ் ஒழுங்கையில் அமைதியின்மை [VIDEO]

தற்போதைய வரி மாற்றம் குறித்து ஜனாதிபதி அறிக்கை

எயார்பஸ் மோசடிக்கும் எனக்கும் தொடர்பில்லை – நாமல்