உலகம்

நைஜீரிய துப்பாக்கிச்சூடு – 14 பேர் பலி

(UTV | நைஜீரியா) – நைஜீரியாவில் போகோஹரம் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக நைஜீரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நைஜீரியாவில் வட மத்திய மாகாணமான நைஜரில் உள்ள உகுரு கிராமத்தில் குறித்த துப்பாக்கி தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன

இதனை அடுத்து உகுரு கிராமத்தில் பொதுமக்களின் பாதுக்காப்பிற்காக இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும் தாக்குதல் மேற்கொண்ட போகோஹரம் கிளர்ச்சியாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் நைஜீரிய இராணுவ வீரர்கள் ஈடுப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜப்பான் பிரதமர் பதவி விலகத் தயார்

கொரோனா வைரஸ் : சவுதி அரேபியாவில் முதலாவது நபர் இனங்காணல்

பூர்வகுடிகள் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் தேசிய கீதத்தை மாற்றிய அவுஸ்திரேலியா