உள்நாடு

நேற்றைய தினம் 39 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,234 ஆக திகரித்துள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம்(13) மாத்திரம் 39 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 12 பேருக்கும், கட்டாரில் இருந்து வந்த 16 பேருக்கும், உக்ரைன் பிரஜை ஒருவருக்கும், மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், எத்தியோப்பியாவில் இருந்து வந்த ஒருவருக்கும், குவைட்டில் இருந்து வந்த 6 பேருக்கும், செங்கடல் பிராந்திய கடலோடி ஒருவருக்கும் நேற்றைய தினம் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,996 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தற்போது 226 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

மின்சார வாகன அனுமதிப் பத்திரத்தில் பல மோசடிகள்

editor

எமது தேசத்தின் பெறுமையினை உலகறியச் செய்வோம் சுதந்திர தின செய்தியில் இல்ஹாம் மரைக்கார்

editor

ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல்

editor