உள்நாடு

நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் 12 பேர் கடற்படையினர்

(UTV | கொவிட் – 19) – நாட்டில் கொரோனா தொற்றாளர்களாக நேற்று பதிவாகிய 15 பேரில் 12 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஏனைய மூவர் தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வைத்திய கண்காணிப்பின் கீழ் 526 பேர் உள்ளனரென அவர் தெரிவித்துள்ளதுடன், கொழும்பு, புத்தளம், கம்பஹா ஆகிய பகுதிகளிலேயே அதிகமானோர் இனங்காணப்பட்டுள்ளனரென, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்க நடவடிக்கை

2016 பிணைமுறி மோசடி : ரவி உள்ளிட்டோருக்கு விடுதலை

தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானம் இதுவரை இல்லை