உள்நாடு

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

(UTV|கொழும்பு) -நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மூன்று பேர் நேற்றைய தினம்(09) அடையாளம் காணப்படுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் சேனாபுர புனர்வாழ்வு மையத்திலுள்ள இருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,844 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2,579 ஆக உயர்வடைந்துள்ளதுடன், 254 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா வைரஸ் தொடர்பான விசேட கூட்டம்

முஸ்லிம் பாடசாலைகளுக்கு 30 ஆம் திகதி விடுமுறை!

கந்தான, மஹாபாகே ஆகிய பகுதிகள் முடக்கம்