கிசு கிசு

“நேரம் வரும் வரை காத்திருக்கிறோம்” – தயாசிறி

(UTV | கொழும்பு) – தேவையான நேரம் வரும் போது கட்சியின் மத்திய குழுவின் அனுமதியுடன் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு தமது கட்சிக்கு எந்த தயக்கமும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் நாயகம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் இன்று பொலன்னறுவை புலத்திசி புலனாய்வு நிலையத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிசேனவும் கலந்துகொண்டார்.

பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட சிறுநீரக வைத்தியசாலையை வெள்ளை யானையாக மாற்ற அரசாங்கத்தின் சில தரப்பினர் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

நகைச்சுவை நடிகர் 10-வது குழந்தைக்கு தந்தை ஆனார்

போலி கடன் அட்டைகள் பயன்பாடு…

VIP மற்றும் VVIP வழியால் வரும் அரசியல்வாதிகளுக்கு வைக்கப்பட்ட ஆப்பு !