உலகம்

நேபாளத்தில் தொடர் நிலநடுக்கம்

(UTV | காத்மண்டு) – நேபாள நாட்டில் இன்று அதிகாலை 1.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் ரிக்டரில் 4.5 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. டோட்டி மாவட்டத்தில் நிலநடுக்கத்தால் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்ததில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.

Related posts

அமெரிக்காவில் சூறாவளி – 19 பேர் உயிரிழப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

கடந்த 24 மணிநேரத்தில் 4,187 கொவிட் மரணங்கள்