உள்நாடு

நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் இராஜினாமா

(UTV | கொழும்பு) –   நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கலாநிதி ஜெ. மான்னப்பெரும தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட அவர் 20 வருடங்களுக்கு மேலாக அந்த சபையில் பணிப் புரிந்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலையில் தொடர்ந்தும் அந்த பதவியை வகிப்பது கடினம் என கருதி பதவி விலகல் கடிதத்தை விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

செப்டம்பர் மாதம் முதல் விசேட ரயில் – பேரூந்து சேவைகள்

பொது மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படை [வர்த்தமானி]

ஐ.தே.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று